விவசாயிகளுக்கு தானிய சேமிப்புப் பயிற்சி

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தின் சார்பில் தானிய சேமிப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தின் சார்பில் தானிய சேமிப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு மதுரை மண்டல வேளாண்மை உதவி இயக்குநர் அமலா தலைமை வகித்தார்.பின்னர் அவர், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மாநிலங்களில் உள்ள சந்தைகளை ஒருங்கிணைத்து அவற்றை அகில இந்திய அளவில் இனையத்தளம் வாயிலாக இணைத்து வர்த்தகம் புரிவதற்கு வழிவகை செய்தல், அனைத்து சந்தைகளிலும் வர்த்தக முறைகளை ஒருங்கிணைத்து வெளிப்படையான அணுகுமுறை மூலம் செயல்திறனை அதிகரித்தல், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறைகளை இணையதளம் மூலம் உருவாக்குதல், கணினி மூலம் ஏல முறை, தரத்திற்கேற்ப விலை பெற உதவி புரிதல் மற்றும் விரைவாக விளை பொருள்களுக்கான தொகையினை விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் அனுப்புதல் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார்.
 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள், மறைமுக ஏலம், 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக விளைபொருள்களின் மதிப்பில் 75 சதவீதம் வரை விவசாயிகளுக்கும், 9 சதவீத வட்டியில் அதிக பட்சமாக ரூ. 2 லட்சம் வரை பொருள் ஈட்டுக்கடனும், 1 குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வாடகையில் கிட்டங்கி வசதிகள் பற்றியும், உழவர் நல நிதி பற்றியும் ராமநாதபுரம் மாவட்டம் விற்பனைக் குழு கண்காணிப்பாளர் ஆயிஷா விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com