சேமநல நிதி வழங்குவதில் தாமதம்: துப்புரவுத் தொழிலாளர்கள் புகார்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு சேமநல நிதியை

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு சேமநல நிதியை தராமல் தாமதப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 23 பேர் துப்புரவுப் பணியினை செய்து வந்தார்கள். இவர்களில் 16 பேருக்கு மட்டும் சேமநல நிதி வழங்காமல் தாமதப்படுத்துவதாகவும், அத்தனியார் நிறுவனத்திடமிருந்து 
அத்தொகையை பெற்றுத் தருமாறும் துப்புரவுப் பணியாளர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் புகார் செய்துள்ளனர். 
மேலும் அப்புகாரில் சேமநல நிதி ஒவ்வொருவருக்கும் ரூ.22,500 வருவதை பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் ரூ.12 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சேமநல நிதித் தொகையை தரமுடியும் என்று கூறி வருவதாகவும் அப்புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com