ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி மனு: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் தரத்தை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் தரத்தை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
  முதுகுளத்தூர் டி.கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப பள்ளியின் மேற்கூரை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். இப்பள்ளி கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தரமின்றி கட்டடம் கட்டப்பட்டதால், தற்போது, அரசு இ-சேவை மையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 மழலையர் பள்ளிகள், 934 தொடக்கப்பள்ளிகள், 215 உயர், நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல பள்ளிகளின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
 எனவே, டி.கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியை மறுசீரமைப்பு செய்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
 இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com