ராமநாதபுரத்தில் நவ.16 இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, இலவச தொழிற்பயிற்சி, இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டம், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயனடைய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப் பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் கொண்டு வந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆகியவை கொண்டு வரவும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com