வல்லந்தை கூட்டுக் குடிநீர் திட்டம் முடக்கம்

கமுதி அருகே கூட்டு குடிநீர் திட்டம் செயல்படாமல் முடக்கப்படுள்ளதால் குடிநீரின்றி 10- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கமுதி அருகே கூட்டு குடிநீர் திட்டம் செயல்படாமல் முடக்கப்படுள்ளதால் குடிநீரின்றி 10- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கமுதி அருகே எழுவனூர், கல்லத்திகுளம், மீட்டாங்குளம், இ.நெடுங்குளம், சிலிப்பி, பிரப்பனார்பட்டி, பூலாங்குளம், கூடலூரணி, இலந்தைகுளம், போத்தநதி, கூடக்குளம், பள்ளிமூட்டை, புத்துருத்தி, வலையமணக்குளம், காக்குடி, கீழநரியன், தீர்த்தான்அச்சங்குளம், கீழக்காக்காகுளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வல்லந்தை கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.   கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத் திட்டம் முடக்கப்பட்டதால், 10 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல், விவசாயத்திற்கு பயன்படுத்தும் உவர்ப்பு நீரை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.   
இதனால் டேங்கர் லாரிகளுக்காக பொதுமக்கள், காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வல்லந்தை நீரேற்றும் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து ராட்சத தொட்டி, சேதமடைந்த இயந்திரங்களை சீரமைத்து கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com