மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் ஆட்சியர்

நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீரில் இறால் மீன் வளர்ப்பு ஆகியனவற்றில் ஆர்வமுள்ளவர்கள் அரசு மானியம் பெ

நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீரில் இறால் மீன் வளர்ப்பு ஆகியனவற்றில் ஆர்வமுள்ளவர்கள் அரசு மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  மத்திய ,மாநில அரசுகள் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் புதிய மீன் பண்ணைக் குளங்கள், குட்டைகள் அமைத்தல், ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில் அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் மானியமாக வழங்கப்படும். 
ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைத்தல், புதுப்பித்தல் ஆகியனவற்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3.50லட்சமாகும்.
 இதில் ரூ.1.40லட்சம் மானியமாக வழங்கப்படும். நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருட்கள் வாங்க ஆகும் செலவினங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவு ரூ.1.50லட்சத்தில் மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். பயனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ள விவசாயிகள் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் 30 தினங்களுக்குள் மீன்வளத்துறை உதவி இயக்குநர்(வடக்கு)அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் (வடக்கு) ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலக வளாகம், ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியிலும், தொலைபேசி எண்-04567-230355 என்ற எண்ணிலும் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com