ராமநாதபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி

ராமநாதபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சிறப்புத் திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சிறப்புத் திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா கடந்த அக். 5 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி தினசரி நவநாள் திருப்பலியும்,  இரவு ஆலய வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில் மையச்சிந்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன. 
விழாவினைத் தொடர்ந்து 9ஆம் நாள் நிகழ்வாக திருவிழா சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஜெ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். பங்குத்தந்தை என்.அருள் ஆனந்த், உதவிப் பங்குத்தந்தை ஏ.ஜேசுரட்சகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பின்னர் ஆலய வளாகத்திலிருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. தேரில் புனித ஜெபமாலை அன்னை சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தார். அப்போது கிறிஸ்தவர்கள் ஜெபமாலை ஜெபித்துத் சென்றனர். 
இந்த தேர்பவனியில் திருஇருதய அருள்சகோதரர்கள், அமலவை கன்னியர், பங்குப் பேரவையினர், அன்பியங்கள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர். தேர்பவனியின் போது வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இவ்விழாவையொட்டி ராமநாதபுரம் எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com