குண்டர் தடுப்புச்சட்டத்தில் இளைஞர் கைது

கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  கமுதியைச் சேர்ந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  கமுதியைச் சேர்ந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியில் வசித்து வருபவர் மாரிமுத்து மகன் மணிவண்ணன் (23). இவர் மீது நகைத்திருட்டு, 2 அடிதடி வழக்குகள், கஞ்சா விற்பனை,  டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இதனையடுத்து தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மணிவண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா பரிந்துரை செய்தார். இதனை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மணிவண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையிலான போலீஸார் மணிவண்ணனை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com