ஆர். எஸ். மங்கலத்தில் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தினால் அபராதம்'

ஆர் எஸ் மங்கலம் பகுதியில் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தினால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கபடும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார். இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது: ஆர்

ஆர் எஸ் மங்கலம் பகுதியில் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தினால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கபடும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது: ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சியில் திறந்தவெளி கழிவறை இல்லாத நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக
பேரூராட்சி மூலம் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு ரூ. 8,000 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு குடியிருப்புகளில் கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் பேரூராட்சிக்குட்பட்ட கிராமப்புறங்களில் 5 இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு இடங்களில் சமுதாயக் கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டில் உள்ள கழிவறை அல்லது அருகாமையில் உள்ள சமுதாயக் கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மீது ரூ.50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com