கமுதி அருகே மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

கமுதி அருகே விவசாய நிலத்தில் மின் வழிப்பாதைக்காக உயர்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை விவசாயிகள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.


கமுதி அருகே விவசாய நிலத்தில் மின் வழிப்பாதைக்காக உயர்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை விவசாயிகள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
கமுதி அருகே காடமங்கலத்தில் மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரிஅனல் மின் நிலைய சூரிய மின் ஒளி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 100 மெகாவாட் மின்சாரம் தயாரித்து, செங்கப்படை அருகே உள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக காடமங்கலத்திலிருந்து செங்கப்படைக்கு வரும் வழியில் உள்ள விவசாய நிலங்களில் உயர் கோபுர மின் வழிப்பாதை அமைக்கபட்டு வருகிறது.
புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் முத்துராமலிங்கம், முனியசாமி, தங்களது விவசாய நிலத்தில் உயர் மின் கோபுர மின் வழிப்பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து மண்ணெண்ணையை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த கமுதி போலீஸார் முன்னிலையில், விவசாயிகள், மின் வழிப்பாதை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை விவசாயி முனியசாமி கூறியது: தங்களுக்கு இருக்கும் 1 ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி மின்கோபுரங்களை அமைத்து வருகின்றனர். இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தால் சோலார் மின் உற்பத்தி நிலைய வாசலில் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்தப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாய நிலங்களை தவிர்த்து மாற்றுப் பாதையில் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com