ராமநாதபுரத்தில் பொறியாளர் தின விழா

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தியப் பொறியாளர் விஷ்வேஷ்வரய்யாவின் பிறந்த நாளை ஆண்டு தோறும் பொறியாளர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தியப் பொறியாளர் விஷ்வேஷ்வரய்யாவின் பிறந்த நாளை ஆண்டு தோறும் பொறியாளர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும், இந்திய பொறியாளர் சங்க மாணவர் கூட்டமைப்பும் இணைந்து இவ்விழாவை நடத்தின.
கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் பி.மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
விழாவில் உப்பூர் அனல் மின்திட்டத்தை சேர்ந்த எல்.அன்.டி. திட்ட மேலாளர் ராம்ஜி ஐயாகிரி, பெல் நிறுவன பொது மேலாளர் ஆர்.அன்பரசு, மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆறுமுகம், பி.எஸ்.என்.எல். பொறியாளர் பி.வெங்கடேஷன், பொறியாளர் குணசேகரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இயந்திரவியல் துறைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
விழாவில் பல்வேறு தொழில் நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com