"காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டம் தாமதத்தால் 170 டி.எம்.சி. நீர் கடலில் கலந்தது'

காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படாததால், காவிரியில் இருந்து 170 டி.எம்.சி.

காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படாததால், காவிரியில் இருந்து 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது என இணைப்புக்கால்வாய் திட்ட மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன் தெரிவித்தார்.
காவிரி, குண்டாறு, வைகை ஆறுகள் இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை விவசாயிகள், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து பிரசார பயணம், இத்திட்டத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் தொடங்கியது.  மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து, துணைத் தலைவர் கரூர் முருகேசன், பரமக்குடி மதுரைவீரன், திருச்சி பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன் கூறியது: காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பெருக்கின்போது, மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனால் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கரூர், திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு கால்வாய் திட்டம் 1956 ல், ரூ.189 கோடியில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தால் 3.77 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 
கடந்த 2008-09 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், இந்த இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு ரூ.3,290 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் மாயனூரில் 2014 ஆம் ஆண்டில் மதகு அணை கட்டப்பட்டது. அதன்பிறகு கால்வாய்கள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 
இதனால்  இந்த இணைப்புக் கால்வாய்  திட்டத்தை  மாநில அரசு அமல்படுத்தவேண்டும் என, செப்டம்பர் 18 முதல் 23 ஆம் தேதி வரை, கமுதி குண்டாற்றிலிருந்து மாயனூர் அணைக்கட்டு வரை வேன் மூலம் பிரசாரப் பயணம், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டுள்ளோம் என்றார். 
இதனைத்தொடர்ந்து பரமக்குடியில் அவர் பேசியது: கடந்த ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து இன்றுவரை காவிரியிலிருந்து 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இத்திட்டம் முழுமை பெறாததால் தொடர்ந்து உபரி நீர் கடலுக்குச் செல்கிறது.  இதனை தடுத்து இணைப்புக் கால்வாய் அமைத்தால்  7 மாவட்டங்களைச் சேர்ந்த 19 ஆறுகளின் ஆயக்கட்டு பாசன பகுதிகளான மொத்தம் 8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மு.மதுரைவீரன் தலைமை வகித்தார். மிசா மாரிமுத்து, மு.மலைச்சாமி, சோழந்தூர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இப்பிரசார பயணத்தில் இணைப்பு கால்வாய்த் திட்ட மாநிலச் செயலாளர்கள் ராம.முருகன், ஜெயச்சந்திரன், முருகேசன், மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மலைச்சாமி, பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com