கீழடி அகழாய்வு: தொல்லியல் அதிகாரி  இடமாற்றம் உறுதி: மத்திய அரசு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுப்பணியில் இருந்த தொல்லியல் துறை அதிகாரியின் இடமாறுதலை உறுதி செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுப்பணியில் இருந்த தொல்லியல் துறை அதிகாரியின் இடமாறுதலை உறுதி செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், 2015 முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட அகழாய்வில் சங்க கால மக்கள் பயன்படுத்திய 1800 வகையான பொருள்களும், இரண்டாம் கட்ட அகழாய்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களும் சேகரிக்கப்பட்டன.
 மூன்றாம் கட்டமாக அகழாய்வு தொடங்க வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக 3 ஆம் கட்ட ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 இந்நிலையில், கீழடி அகழாய்வில் தலைமை அதிகாரியாக இருந்த மத்திய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பிரிவு (பெங்களூரு) கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், அஸ்ஸாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
 இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையீடு செய்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்தது.
 இருப்பினும், அவரது இடமாறுதலை உறுதி செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொல்லியல் துறை இயக்குநர்
பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com