திருப்பத்தூர் அய்யனார் கோயிலில் சேங்கை வெட்டு வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், தம்பிபட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட குளம்கரை கூத்த அய்யனார் திருக்கோயிலில்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், தம்பிபட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட குளம்கரை கூத்த அய்யனார் திருக்கோயிலில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சேங்கை வெட்டு வைபவம் நடைபெற்றது.
   திருப்பத்தூர் ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத குளம்கரை கூத்த அய்யனார் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பின்பு கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர், முதல் புரவி எடுப்புத் திருவிழா ஏப்ரல் 29 இல் நடைபெற உள்ளது.    இவ்விழாவையொட்டி, சித்திரை முதல் நாள் வெள்ளிக்கிழமை மூன்று கிராமத்தார்கள் ஒன்றுகூடி புரவிக்கு பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தம்பிபட்டியில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் சின்னக்கருப்பர், நொண்டிக் கருப்பர், அம்மன் தெய்வங்களுக்கு சாமி அழைப்பு நடைபெற்றது. பின்னர், 3 கிராமத்தார்களும் ராமர் மடம் வந்து சுவாமி அரிவாள் மீது ஏறி சாமியாட்டம் நடைபெற்றது.   இதையடுத்து, பெரிய கண்மாய்க் கரையில் அமைந்துள்ள குளம்கரை கூத்த அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று, அங்கு அய்யனாருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டது. முக்கிய நிகழ்வாக, கோயில் குளம் எதிரே உள்ள குளத்தில் மூன்று கிராமத்தினரும் சேர்ந்து சேங்கை வெட்டுதல் வைபவம் நடத்தி, புரவிக்கு மண் கொடுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தம்பிபட்டி கிராமத்தினர் செய்திருந்தனர். சித்திரை 16 ஆம் நாள் புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com