காரைக்குடி செக்ரி-யின் வணிகரீதியான கண்டுபிடிப்பு தொழில்நுட்பம்:சென்னையில் ஆகஸ்ட் 19-இல் காட்சிப்படுத்த ஏற்பாடு

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தால் (செக்ரி) கண்டுபிடிக்கப்பட்டுள்ள வணிகத்துக்கு தயாராக உள்ள தொழில்நுட்பங்களை

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தால் (செக்ரி) கண்டுபிடிக்கப்பட்டுள்ள வணிகத்துக்கு தயாராக உள்ள தொழில்நுட்பங்களை ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்னையில் காட்சிப்படுத்தப்பட உள்ளதால், இதில் பங்கேற்க தொழில்முனைவோர், தொழில் முறை சார்ந்த வாடிக்கையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
       இது குறித்து காரைக்குடி செக்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சி.எஸ்.ஐ.ஆர்-ன் 38 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான காரைக்குடி செக்ரி ஆய்வகம்,  விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் ஆராய்ச்சிகளில் தனிச்சிறப்பும், தரமான பங்களிப்புகளையும் வழங்கி வருகிறது.
       இந்திய மற்றும் வெளி நாட்டு தொழில்துறைகளுக்கான மின்வேதியியல் தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறது. மேலும், சிறிய மற்றும் பெரிய தொழில் குழுமங்களுக்கு செக்ரியின் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
      தற்போது, வணிகத்துக்கு தயாராக உள்ள தொழில்நுட்பங்கள், மின்வேதியியல் மற்றும் அரிமானம் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்றவை காட்சிப்படுத்தும் வகையில், தொழில்துறைக் கூட்டம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
    இக்கூட்டத்தில், தொழில்துறை சார்ந்த வாடிக்கையாளர்களும், தொழில்முனைவோர்களும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு உள்பட பல நிறுவனங்களும் பங்கேற்கவிருக்கின்றன. முக்கியத் தொழில்நுட்பங்களின் கண்காட்சிகள், செயல்விளக்கங்கள், நுண் விளக்க உரைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
   இதில், ஆர்வமுள்ள தொழில்துறை சார்ந்த பணியாளர்கள், தொழில்முனைவோர்கள் பங்கேற்கலாம்.
 இதற்கு செக்ரி-யின் இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லாமல் பதிவு மூப்பு அடிப்படையில் பங்கேற்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com