காரைக்குடி நகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 மடங்கு வாடகை உயர்வு: வியாபாரிகள் அதிர்ச்சி

காரைக்குடியில் நகராட்சி வணிக வளாகக் கட்டடங்களில் உள்ள கடைகளுக்கு திடீரென 15 மடங்கு வாடகை உயர்த்தப் பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

காரைக்குடியில் நகராட்சி வணிக வளாகக் கட்டடங்களில் உள்ள கடைகளுக்கு திடீரென 15 மடங்கு வாடகை உயர்த்தப் பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
   காரைக்குடி நகராட்சிக்கு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணா நாளங்காடி, தினசரி காய்கறி சந்தை, கல்லுக்கட்டி மேற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் செக்காலை சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் வணிகவளாகங்கள் உள்ளன. இதில் 248 கடைகள் உள்ளன.  இக்கடைகளில் உணவகம், சில்லரை வியாபாரக் கடைகள், தேநீர் நிலையம், பேக்கரி, காய்கறிக் கடைகள், பாத்திரக் கடை கள், ஆயத்த ஆடைகள் விற்பனைக் கடை, பூ மற்றும் பழக் கடைகள் என வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளுக்கான வாடகையை தற்போது 15 மடங்கு உயர்த்தியிருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், சிறிய அளவில் கடைகளை நடத்தி வருகிறோம்.  வியாபாரத்தில் காய்கறி, பழங்கள் அன்றாடாம் விற்பனையாகவில்லையென்றால் அவை அழுகி கெட்டுபோகும் நிலை உள்ளது. எங்களுக்கு பழைய நிலையில் வசூலித்த அதே வாடகையை  வசூலிக்கவேண்டும் என்றனர்.
    இந்நிலையில் காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நகராட்சியின் வாடகை உயர்வு குறித்து முறையிட்டனர். இதையடுத்து தொழில்வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி தலைமையில் வியாழக்கிழமை நகராட்சி வணிக வளாகத்தில் கடைகள் நடத்திவரும் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தொழில் வணிகக்கழக செயலாளர் வி. வெங்கடாசலம், துணைத் தலைவர் ராகவன் செட்டியார் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆலோசித்தனர். இதில் நகராட்சித் துறையால் வாடகை உயர்த்திய அரசு ஆணையை திரும்பப்பெற்று பழைய வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை நகராட்சித்துறை இயக்குநர், மதுரை மண்டல இயக்குநர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோரைச்சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இதில் முடிவு கிடைக்கவில்லையெனில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
 இதற்காக காரைக்குடி பெரு நகராட்சி கடை வியாபாரிகள் கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு 10 ஒருங்கிணைப்பாளர்களையும் தேர்வு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com