கமுதி கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட கருத்தரங்கம்

கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்லம் தலைமை வகித்தார். கருத்தரங்கில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பொறுப்பு முதல்வர் செல்லம் பேசினார். திட்டத்தின் நோக்கம், அதில் மாணவர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் எதிர்காலத்தில் கல்லூரி மாணவர்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பது பற்றியும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமுத்து, சிவராமகிருஷ்ணன் குமார், பால்பாண்டியன் ஆகியோர் விளக்கிக் கூறினர். நேரு யுவ கேந்திரா சார்பில் தன்னார்வ தொண்டர் மு.வெள்ளைப்பாண்டியன் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் பற்றி கூறினார். எச். ஐ. வி. விழிப்புணர்வு ஆலோசகர் ஆயிஷாகனி, எச்ஐவி பாதிப்பை கட்டுபடுத்துவது பற்றி பேசினார். ரெட் ரிப்பன் கிளப் தலைவர் முனைவர் மாமல்லன் , முனைவர் பற்குனம், கமுதி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பர் தர்மர், ஏஆர்டி களப்பணியாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் சிவராமகிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com