சுதந்திர போராட்ட வீரர் ஆ.நெல்லியான் நினைவு தினம் அனுசரிப்பு

சுதந்திர போராட்டத்தில் காரைக்குடியில் வீரமரணம் அடைந்த ஆ.நெல்லியான் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் காரைக்குடியில் வீரமரணம் அடைந்த ஆ.நெல்லியான் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1942 ஆகஸ்ட் 12- இல் காரைக்குடியில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கண்டனூர்- பாலையூர் பகுதியைச்சேர்ந்த ஆ. நெல்லி யான் என்ற 24 வயது இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் மரணமைடந்தார். இதையொட்டி நெல்லியான் நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்காக கண்டனூர் - பாலையூரிலிருந்து தேசியக்கொடி மற்றும் ஜோதி எடுத்துக்கொண்டு இளைஞர்கள் பங்கேற்ற தொடர் ஓட்டம் நடைபெற்றது.
பின்னர் நெல்லியான் வீரமரணமடைந்த பகுதி யான காரைக்குடி மகர்நோன்பு திடல் அருகே அமைக்கப்பட்ட நினைவுத்தூணில் தேசியக் கொடியை வைத்தும், தொடர் ஓட்ட ஜோதியை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லியானின் சகோதரர் மகன் ஆண்டியப்பன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சுப. முத்துராமலிங்கம், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தீரன் நெல்லியான் நினைவுத்தூணுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com