காரைக்குடி பள்ளியில் ஆங்கில மொழி தொடர்பு திறன் பயிற்சி

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில மொழித் தொடர்பு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில மொழித் தொடர்பு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
     காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்கப்பட்டது. 
    இப்பயிற்சியை, பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா துவக்கி வைத்தார். கல்லூரியின் முதுகலை மாணவிகள் வி.என். ராஜலெட்சுமி, டி. பிரித்தி பிரியா, எஸ். சுகன்யா, எஸ். கற்பகம் மற்றும் டி. இளையபொன்னி ஆகியோர் ஆங்கில உச்சரிப்புகள் மற் றும் பேசும் முறைகள் குறித்து கற்றுக்கொடுத்தனர்.
     புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியின் நிறைவு விழாவில், உமையாள் ராமநாதன் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் என். அழகுமீனாள் தலைமை வகித்தார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் ஆங்கில ஆசிரியர்கள் கீதா சுந்தரேஸ்வரி, விஜயகாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com