திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில்  சுற்றித்திரியும் மாடுகளால் மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில்  சுற்றித்திரியும் மாடுகளால் மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 
   திருப்பத்தூர் நகரில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தகுந்தாற்போல அகலமான சாலை வசதிகள் இல்லை. இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மதுரை சாலை, சிவகங்கை சாலை, காந்திசலை, தாசில்தார் அலுவலகம், அஞ்சலக வீதி, பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. அவை கூட்டம் கூட்டமாக சாலையைக் கடப்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பேருந்துநிலையத்தில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. 
மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் பேருந்திற்காக காத்திருப்பவர்களை அச்சுறுத்துவதுடன் திடீரென மாடுகள் இங்கும் அங்குமாக ஓடிவருகின்றன. புதன்கிழமை இரவு திடீரென இரண்டு காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டைப் போட்டுக் கொண்டதால் அருகில் நின்ற பயணிகள் அலறி அடித்து ஓடினர். பின்னர் கடைக்காரர்கள் மாடுகளை விரட்டினர். இதனால் பயணிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும் சாலையின்
நடுவே படுத்துக் கொள்வதால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் இவ்வாறு சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். எனவே ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் பேரூராட்சிக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com