மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ரஜினி பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் நடிகர் ரஜினிகாந்த் 68-ஆவது பிறந்தநாள் விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் நடிகர் ரஜினிகாந்த் 68-ஆவது பிறந்தநாள் விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
   மானாமதுரை அருகேயுள்ள எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கேட்டவரம் தரும்  முத்துமாரியம்மன் கோயிலில் ரஜினி உடல்நலத்துடன் நீண்ட நாள்கள் வாழ வேண்டியும் அவர் அரசியலில் ஈடுபட வேண்டியும் ரஜினி பெயரில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 
இந்நிகழ்ச்சியில் ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் செர்டு எல்.பாண்டிஜேபி.ரவி, கருப்புச்சாமி, நாகேஸ்வரன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் இவர்கள் ராஜகம்பீரம், பீசர்பட்டிணம் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப்புத்தகங்கள் வழங்கினர்.  
பின்னர் மானாமதுரை சோணையாசுவாமி கோயிலில் அவரது ரசிகர்கள் ரஜினி பெயரில் சிறப்பு பூஜைகளை நடத்தி அதன்பின் கோயில் முன்பு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கேக் வழங்கி கொண்டாடினர். புறவழிச்சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலிலும் ரஜினி பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள மசூதியில் ரஜினி உடல்நலத்துடன் வாழ வேண்டி ரசிகர்கள் தொழுகை நடத்தினர். 
இந்நிகழ்ச்சிகளில் ரஜினி மன்ற நகர்த் தலைவர் கே.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சி.பி.ராஜா, சுந்தர், பொன்னழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்புவனம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com