தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தவர் காமராஜர்: பொன்னம்பல அடிகளார்

ஏழை, எளியோர்களது குழந்தைகள் கல்வி கற்க தமிழகம் முழுவதிலும் பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர் என்று, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் சூட்டினார்.

ஏழை, எளியோர்களது குழந்தைகள் கல்வி கற்க தமிழகம் முழுவதிலும் பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர் என்று, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் சூட்டினார்.
குன்றக்குடி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், காமராஜரின் உருவப் படத்துக்கு பொன்னம்பல அடிகளார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. குன்றக்குடி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், காமராஜர் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பொன்னம்பல அடிகளார் பரிசுகள் வழங்கினார். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், குன்றக்குடி அடிகளார் நினைவு மகளிர் கல்வியியல் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:
கல்வி அனைவருமே பெறவேண்டும் என்று முதல்வராக இருந்த காமராஜர், தமிழகம் முழுவதிலும் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஏழை எளியவர்களின் குழந்தைகளும் கல்வி கற்கவேண்டும். கல்வி கற்கும் குழந்தைகளுக்கு உணவு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், அவர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர் காமராஜர் என்றார் பொன்னம்பல அடிகளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com