தேவகோட்டை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பகுப்பொருள்கள் ஆய்வில் இன்றைய சோதனைஎன்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம்

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பகுப்பொருள்கள் ஆய்வில் இன்றைய சோதனைஎன்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.
தென் கொரிய நாட்டு டோங்கு பல்கலைக்கழக பேராசிரியர் காத்தலிங்கம் தொடக்கி வைத்தார். அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ராமலிங்கம் மாநாட்டு உரையாற்றினார்.  பேராசிரியர் மோகன் பட்டறையின் சிறப்பு அம்சங்கள் குறித்து விவரித்தார்.  தொடர்ந்து மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருச்சி பிசப் ஹூபர் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ரவிதாஸ்,  பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன்,முனைவர் சக்திவேலு, திருச்சி நேஷனல் கல்லூரி  பேராசிரியர் ரவிச்சந்தின்,  காதர் முகைதின்  கல்லூரி பேராசிரியர் ஆயிசா மரியம், அழகப்பா கல்லூரி பேராசிரியர் கருணாகரன்,  மயிலாடுதுறை ஏ.வ.சி கல்லூரி பேராசிரியர் முருகன் ஆகியோர் தலைமையில் சிறப்பு அரங்கங்களில் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 6 சிறப்பான கட்டுரைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, இ யற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் விஜயன் வரேவற்றார். ஆய்வு மாணவர்களுக்கு அமெரிக்க  வேலைவாய்ப்புகள் பற்றி பேராசிரியர் ராமலிங்கம் விவரித்தார். கல்லூரி நிர்வாகத் தலைவர் லட்சுமணன் செட்டியார், செயலர் லெட்சுமி ஆச்சி ஆகியோர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேராசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com