விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம்

முதுகுளத்தூர் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் விதைகளை பெற்றுச்செல்லலாம் எனவேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் விதைகளை பெற்றுச்செல்லலாம் எனவேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மனோகரன் அறிக்கை: முதுகுளத்தூர் சுற்று வட்டார விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டுக்கு தேவையான விதைகள் வேளாண்மை அலுவலகத்தில் இருப்பில் உள்ளன. நெல்லில் குறுகியகால ,அதிக விளைச்சல் தரக்கூடிய சன்ன ரகங்களான கோ51,14,800 கிலோவும், என்,எல்.ஆர்.34449 ரகத்தில் 28,250கிலோவும் ஆடுதுறை 49 ரகத்தில் 1,300கிலோவும் இருப்பில் உள்ளன. அதிகமான விளைச்சல் தரக்கூடிய கேழ்வரகு, குதிரைவாலி, தினை ரகங்களும் உள்ளன.  தேவைப்படும் நிலத்துக்கான பட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் போன்றவைகளை அலுவலகத்தில் கொடுத்து, விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com