குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.  

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.  
 சிவகங்கை அம்பேத்கர் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அவர் பேசியது:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது பிறந்து 2 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீரிழிவு நோய்க்கான மருத்துவம் குறித்தும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், சாப்பிடுவதற்கு முன் கை கழுவும் தன்மை குறித்தும் விளக்கிக் கூறப்படும்.
ஜூன் 19 தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் ஓ.ஆர்.எஸ் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நாகநாதன், பாருக், முத்துராணி, கலாதேவி மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com