ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில், ப. சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி தலைமை வகித்து கேக் வெட்டினார். நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், பொருளாளர் கனி முகமது, துணைத் தலைவர்கள் ஆண்டவர் பழனியப்பன், ராஜேஷ், சீனி, சிறுபான்மை காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் சித்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேவகோட்டை: தேவகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் கருமாணிக்கம் தலைமை வகித்தார். ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி மீரா உசேன், அப்பச்சி சபாபதி, நஜிமுதீன், வழக்குரைஞர் சஞ்சய்,ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தென்மாபட்டு புனித ஜான்போஸ்கோ அரசு உதவி பெறும் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள்விழாவை முன்னிட்டு கல்வி உபகரணம் வழங்கும் விழா நடைபெற்றது. நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்குரைஞர் கணேசன், இ.எம்.எஸ்.அபிமன்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன் பங்கேற்று பள்ளிகுழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,மற்றும் எழுது பொருள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் மருதுபாண்டியன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com