பத்தாம் வகுப்பு தேர்வுமானாமதுரை செயின்ட் ஜோசப் பள்ளி 100 சதம் தேர்ச்சி
By DIN | Published on : 21st May 2017 12:24 AM | அ+அ அ- |
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப் பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 134 மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவிகள் எம். காயத்ரி, எஸ். ஜஸ்வந்ர சம்யுக்தா ஆகிய இருவரும் 493 மதிப்பெண்களும், வி. பார்கவ பெருமாள், எல். மஞ்சுளா, சி. பரிபூரணலெட்சுமி ஆகிய மூவரும் 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இந்த மாணவ, மாணவியரை, பள்ளியின் செயலர் கிறிஸ்டிராஜ், துணை முதல்வர் பெட்ஷி, தலைமையாசிரியர் ஏஞ்சல் ஆகியோர் பாராட்டினர். மேலும், இப் பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 57 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 113 பேரும் எடுத்துள்ளதாக, பள்ளி செயலர் கிறிஸ்டிராஜ் தெரிவித்தார்.