காரைக்குடி ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் சக்தி நிலை நிறுத்தும் திருவிழா

காரைக்குடி பாப்பா ஊருணி தென்கரை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் சக்தி நிலை நிறுத்தும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி பாப்பா ஊருணி தென்கரை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் சக்தி நிலை நிறுத்தும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 இக்கோயிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மே 16- ஆம் தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. புதன்கிழமை காலையில் முத்தாலம்மன் கோயிலிலிருந்து சக்தி நீர் எடுத்துவந்து திருக்கோயில் ரதி சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் காந்தி திடலிலிருந்து கத்தியை உடலில் அடித்தபடி ஊர்வலமாக கோயிலை அடைந்து சக்தி நிலை நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 வியாழக்கிழமை நா.புதூர் பெருமாள் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியிலிருந்து மகளிர் மன்றத்தின் சார்பில் சீர்கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (மே 26) காலையில் பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்ச்சியும், மே 30-ஆம் தேதி கோயிலில் மறுபள்ளையம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 திருவிழா ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜனசபை நிர்வாகிகள், ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் மகளிர் மன்ற நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com