தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை: விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர ஆன் லைன் மூலம் விண்ணபிக்க மே 31 கடைசி

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர ஆன் லைன் மூலம் விண்ணபிக்க மே 31 கடைசி நாள் என சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் எம்.சீராளன் தெரிவித்துள்ளார்.   
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி விவரம்:சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் கடந்த மே 10 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டன. இதனையடுத்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31 ஆகும்.
 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். மாவட்ட கலந்தாய்வு மூலம் பயிற்சியில் சேர ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பொறியியல் பாடப் பிரிவுகளும், 10 வகுப்பு தேர்ச்சிக்கு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சி மாணவர்களுக்கு அரசால் வழங்கும் விலையில்லா மடிக்கணிணி,மிதி வண்டி, சீருடைகள், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், காலணிகள்,பேருந்து பயண அட்டை ஆகியன இலவசமாக வழங்கப்படும். இவை தவிர, மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com