மாவட்ட சதுரங்கப் போட்டி: காரைக்குடி பள்ளி சாம்பியன்
By DIN | Published on : 14th November 2017 11:07 AM | அ+அ அ- |
சிவகங்கைமாவட்ட அளவிலானசதுரங்கப்போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
காரைக்குடி சுழற்சங்கம், சில்வர் ஸ்டார் சதுரங்கக்கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் 21-ஆம் ஆண்டு என்.என்.ஆர்.எம். நாராயணன் செட்டியார் தெய்வானை ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டிகள் சுழற்சங்கஅரங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழக செட்டிநாடுக்கிளை அரங்கம் ஆகிய இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டித்துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட சதுரங்கக்கழகத்தலைவர் ஆர்.எம்.என். கருப்பையா தலைமை வகித்தார். சுழற்சங்கத்தலைவர் சண்முகம் முன்னிலைவகித்தார். கானாடுகாத்தான் சதுரங்கக் கழகத் தலைவர் முத்தாயி கருப்பையா போட்டிகளைத்துவக்கி வைத்தார். இதில் 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 25 வயது மற்றும் பெற்றோருக்கானது என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 7 வயதுப்பிரிவில் எஸ். அபினேவ், 9 வயதுப்பிரிவில் ஸ்ரீராம் சுந்தர், 11 வயதுப்பிரிவில் ஆர். பூபாலன், 13 வயதுப்பிரிவில் டி. விநாயகன், 25 வயதுப்பிரிவில் பி. கார்த்திக், பெற்றோர் பிரிவில் எஸ். பாலு ஆகியோர் முதல் பரிசு வென்றனர்.
அதிகப்புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியும், அதிகப்போட்டியாளர்கள் பங்குபெற்றதற்கான விருதை தேவகோட்டை இன்பாண்ட் ஜீசஸ் பள்ளியும் பெற்றன. பரிசளிப்பு விழாவில், மாவட்ட சதுரங்கக்கழகத்துணைத்தலைவர் சேவு. முத்துக்குமார் தலைமைவகித் தார். சுழற்சங்கச்செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலைவகித்தார். இந்திய மருத்துவர் சங்க தமிழ் நாடு கிளையின் முன்னாள் தலைவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன் வெற்றிபெற்ற அணிகளுக்குக் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கிப்பேசினார்.
நிகழ்ச்சியில், சுழற் சங்க முன்னாள் தலைவர் அருணாச்சலம், ராம்நகர் சுழற்சங்கச்செயலர் அன்புச் செழியன், இளையோர் சேவை இயக்குநர் கார்த்தி, மாவட்டச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ஏ.ஜி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.