குறைபாடுடைய பெண்ணுக்கு பிரசவம்: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறைபாடுடைய கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறைபாடுடைய கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
   இதுகுறித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் விஜயலெட்சுமி கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் சேந்தநதி கிராமத்தைச் சேர்ந்த காயாம்பு மனைவி புவனேஸ்வரி (40) என்பவர் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த நவ. 3ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
   இவரை பரிசோதனை செய்ததில், குறைந்த உயரம் (135 செமீ), வலது புறம் கோணலான கழுத்து (ஸ்டெர்னோ கிலைடாய்ட் தசையின்மை), பக்கவாட்டில் வளைந்த முதுகெலும்பு (ஸ்கோலியோஸி), கீழ்புறமாக இடமாறிய வலது சிறுநீரகம், கீழிறங்கிய கர்ப்பப்பை (யுனிகார்னுவேட் கர்ப்பப்பை), சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
  மேற்கண்ட குறைபாடுகளால் நோயாளிக்கு பிரசவ நேரத்தில் மயக்க மருந்து கொடுப்பதோ, பிரசவம் பார்ப்பதோ மிகவும் சிரமமாக இருந்தது. இதையடுத்து பிரசவத்திற்கான அறுவை சிகிச்சையின் போது, முதுகெலும்பில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, இருவரும் நலமாக உள்ளனர்.
   பின்னர் அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட மயக்க மருந்து மருத்துவ குழுவைச் சேர்ந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் பி. மகேஸ்வரி, இணைப் பேராசிரியர் பாப்பையா, செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் கஸ்தூரிபாய், மகப்பேறு மருத்துவ குழுவினர் தலைமை மருத்துவர் எம்.விஜயலெட்சுமி உள்ளிட்டோரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சாந்திமலர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com