சத்துணவு ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக மாற்றக் கோரிக்கை

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சாக்கோட்டை ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சாக்கோட்டை ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாக்கோட்டை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர் சுப்பையா, செயலாளர் நாகராஜன், பொருளாளர் மணிமேகலை, துணைத் தலைவர் சேதுராமன், மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, மாவட்டச்செயலாளர் சீமைச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் பழனியப்பன், மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி, அரசு ஊழியர்சங்க வட்டக்கிளைச்செயலாளர் வே. கோடைமலைகுமரன், பொருளாளர் ஜெயராமன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில இணைப் பொதுச்செயலாளர் பி. ராம சுப்பிரமணியன், ஆர்.எம். கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக கே. சுப்பையா, செயலாளராக என். நாகராஜன், பொருளாளராக மணிமேகலை, துணைத் தலைவர்களாக கே. சேதுராமன், பாண்டிமாதேவி மற்றும் நிர்வாகிகள் பலரும் தேர்வுசெய்யப்பட்டனர்.
பின்னர் மாநாட்டில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி முறையான கால முறை ஊதியம் வழங்கவேண்டும். சாக்கோட்டை ஒன்றியத்தில் தீணையப்பு நிலையம் அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com