காரைக்குடி அழகப்பா பல்கலை.யில்  நவ. 19 இல் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் அதன்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் அதன் இணைப்புக்கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பயின்ற மாணவர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என 600 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்படவிருக்கின்றன.
இதில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், அவற்றில் உள்ள பணி இடங்கள், மாணவர்களின் தகுதி, தேர்வு செய்யும் முறை மற்றும் இதர விபரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலும், இதர பணியிடங்களுக்கு மேலாண்மை வளாகத்திலும் முகாம் நடைபெறும்.
வளாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் நவம்பர் 19-ஆம்தேதி காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் நேரில் சென்று தங்களது பெயரை பதிவு செய்து தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 04565 -223106 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com