அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு  முகாம்: 104 மாணவ, மாணவியர் தேர்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 104 மாணவ, மாணவிகள் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 104 மாணவ, மாணவிகள் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம், சென்னை நிறுவனம் சார்பில் 2015-16 மற்றும் 2016-17 கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் துறை மற்றும் இணைப்புக்கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 14 நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு துறைகளைச் சார்ந்த 104 மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுத்தது. இவர்களுக்கான பணி நியமன ஆணையை துணைவேந்தர் சொ. சுப்பையா வழங்கினார். பல்கலைக்கழத்தின் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன், எம்ளாயிபிலிட்டி பிரிட்ஜ் சி.இ.ஓ அம்பலவாணன், அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கா. உதயசூரி யன், வங்கியியல் துறைப் பேராசிரியர் கே. அலமேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com