"இந்தியாவில் 4 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்'

நம் நாட்டின் மக்கள் தொகையான 130 கோடியில் 4 கோடி பேர் மட்டும் வருமான வரி செலுத்துகின்றனர் என காரைக்குடி வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஜெ.எம். ஜமுனாதேவி தெரிவித்தார்.

நம் நாட்டின் மக்கள் தொகையான 130 கோடியில் 4 கோடி பேர் மட்டும் வருமான வரி செலுத்துகின்றனர் என காரைக்குடி வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஜெ.எம். ஜமுனாதேவி தெரிவித்தார்.
காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் வருமான வரித்திட்டத்தில் புதிதாக சேருபவருக்கான ஆயத்த விழிப்புணர்வுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வணிகர்கள், தொழிலதிபர்கள்,தொழில்முனைவோர்களுக்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் ராகவன் செட்டியார், எஸ். காசிவிஸ்வநாதன், பொருளாளர் எஸ்.பி. அழகப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதில் காரைக்குடி வருமானவரித்துறையின் துணை ஆணையலர் ஜெ.எம். ஜமுனாதேவி பேசியது: 
வரிமான வரி செலுத்துவது நாட்டின் முன்னேற்றத்திறகு உதவும். ஆதார், பான், வங்கிக்கணக்கு என அனைத்தும் வருமானவரித்துறையின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் மக்கள் தொகையான 130 கோடியில் 4 கோடி பேர் மட்டும் வருமான வரி செலுத்துகின்றனர். 
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரிதான் விதிக்கப்படும். எனவே புதிய வருமான வரித்திட்டத்தில் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்புத்தர வேண் டும். தாமாகவே வரி செலுத்தும் திட்டத்தில் இணைந்துவிட்டால் அதிகபட்சம் 30 சதவீதமே வரி. வருமா னவரித்துறையினர் சோதனைக்குள்ளானால் அபராதம், வட்டி, குற்றம் என 105 சதவீதம் செலுத்த நேரிடும். எனவே அந்தந்த வருடம் கணக்குகளை தாக்கல் செய்து புதிய வருமான வரித்திட்டத்தில் சேர்ந்து விட்டால் வட்டி தவிர்க்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் காரைக்குடி வருமானவரி அதிகாரி ஆர். ஆண்டி, டி. வசந்தி, ஆய்வாளர் பெருமாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  தொழில்வணிகக் கழக இணைச்செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com