தேவகோட்டையில் குடிநீர் குழாயில் உடைப்பு: டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம்

தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் அம்மச்சி ஊருணி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதுடன்,  தண்ணீர் தேங்கி கொசு

தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் அம்மச்சி ஊருணி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதுடன்,  தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறிவருகிறது.
தேவகோட்டை நகராட்சி 23-ஆவது வார்டுடில் அமைந்துள்ளது கிருஷ்ணராஜபுரம் அம்மச்சி ஊருணி பகுதி.
இந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக நகாட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு 15 நாள்களாகியும் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை.  இதனால் பள்ளம் தோண்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாயிலிருந்து தினமும் பல மணி நேரம் தண்ணீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். மேலும் தண்ணீர் வீணாவதுடன், தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் வீடுகளில் கூட தண்ணீர் தேங்காமல்பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் நிலையில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி ஆவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com