தேவகோட்டையில் நடையாளர் சங்க விழா

தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் 14-ஆவது ஆண்டுவிழா மற்றும் ஹிரோஷிமா நாகசாகிதின ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான

தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் 14-ஆவது ஆண்டுவிழா மற்றும் ஹிரோஷிமா நாகசாகிதின ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நண்பர்கள் நடையாளர் சங்கத் தலைவர் குமரப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது:
 எனது வாழ்க்கையில்  தேவகோட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. நான் தேவகோட்டை தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். அப்போது பாதிரியார் மச்சோடா தலைமை ஆசிரியராக இருந்தார். ஒருநாள் வகுப்பில் ஒவ்வொருவரையும் எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும்  என்று  விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். நான் திரைப்பட இயக்குனராக வரவேண்டும் என்று சொன்னேன். என்னை  அவர்  அருகே வருமாறு அழைத்தார். நான் என்னை அடிக்கப்போகிறார் என்ற அச்சத்தில் அவர் அருகே சென்றேன். அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுத்தார்.       ஆசிரியர்களைக் கூப்பிட்டு இனி பள்ளி  கலைநிகழ்ச்சிகளில், இலக்கிய விழாக்களில் முத்துராமனை பங்கேற்கச் செய்யுங்கள் என்று கூறினார்.  அன்று எனது பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் நான் சிறந்த திரை இயக்குனராக வர முடிந்தது எனக் கூறினார்.
   பின்னர் சிறந்த நடையாளருக்கான விருதுகளை அவர் வழங்கினார். தலைமை ஆசிரியர் கபிலன்வரவேற்றார். சங்கப் பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com