தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நாளை இலக்கிய விழா, நூல் வெளியீட்டு விழா: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்கிறார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் வரும் சனிக்கிழமை (செப்.16) நடைபெற உள்ள தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் வரும் சனிக்கிழமை (செப்.16) நடைபெற உள்ள தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் தமிழ்த்துறையும், வேதமுத்து கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (செப்.16) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
கல்லூரி வளாகத்தில் உள்ள சூசைமாணிக்கம் அரங்கில் நடைபெற உள்ள விழாவிற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிறுவனர் ரா. போஸ் தலைமை வகிக்கிறார்.
வேதமுத்து கல்வி அறக்கட்டளை நிறுவனர் ச. வேதமுத்து எழுதிய நூல் தொகுப்பினை நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் வெளியிட்டு விழாப் பேரூரை ஆற்றுகிறார். தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெரி. செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ஆனந்தா கல்லூரியின் செயலர் ஜேசுராஜ் கே. கிறிஸ்டி ஆசியுரை வழங்குகிறார், தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவையின் புரவலர் எம். சின்ராசு நூலின் முதல் பிரதியை பெற்று வாழ்த்திப் பேசுகிறார்.சிவகங்கை மறைமாவட்ட ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் தே. இருதயராஜ் அடிகளார் ச. வேதமுத்து எழுதிய நூல் தொகுப்பினை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் எஸ். இளம்வழுதி, நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய 'அறிவியலுக்கு அப்பால்' எனும் நூல் குறித்து அறிமுக உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து நூலாசிரியர் ச. வேதமுத்து ஏற்புரையாற்றுகிறார்.
ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் வரவேற்புரையும், சென்னை அரிமா சங்கத்தைச் சேர்ந்த அமல்ராஜ் வேதமுத்து நன்றி தெரிவித்தும் பேசுகின்றனர்.
காரைக்குடி வீ. ராசமாணிக்கம், வே.ஜெயமணி, தேவகோட்டை அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் ஆ.எம். ரெங்கசாமி, எம்ஜிஆர் சிலை அமைப்பு குழுவின் தலைவர் எம். ராசேந்திரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com