அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவிப்பு

பேரரறிஞர் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழாவை யொட்டி காரைக்குடியில் அவரது உருவச் சிலைக்கு அரசியில் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரரறிஞர் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழாவை யொட்டி காரைக்குடியில் அவரது உருவச் சிலைக்கு அரசியில் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைமைச்செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி தலைமையில் மாவட்ட திக தலைவர் அரங்கசாமி, மாவட்டச்செயலாளர் என்னா ரெசு பிராட்லா, நெய்வேலி மணிவண்ணன், ப.க. சுந்தரம், மாநில திராவிடர் மாணவர் கழகச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கட்சியினர்,
அதிமுக சார்பில் சிவகங்கை மக்களவைத்தொகுதி உறுப்பினரும், அதிமுக மாவட்டச்செயலாளருமான பிஆர். செந்தில்நாதன், காரைக்குடி நகர அதிமுக செயலாளர் சோ. மெய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகி கள்,
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் கல்லல் ஒன்றிய திமுகசெயலாளர் நெடுஞ்செழியன், சாக்கோட்டை ஒன்றிய திமுக செயாளர் சுப. முத்துராமலிங்கம், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி.கண்ணாத்தாள்,கல்லல் கரு. அசோகன் மற்றும் திமுகவினர்,
அண்ணா தமிழ்க்கழகத் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் கதிர்வேல் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளையான்குடியில்...: மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளிக்கிழமை அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அண்ணா உருவப்படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் என்.புக்குளி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந் நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியசரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் நஜூமுதீன், தொண்டரணி புலிக்குட்டி, முன்னாள் மாவட்ட இளைஞரணி நிர்வாகி முருகாணந்தம், நிர்வாகிகள் அய்யாச்சாமி, கருணாகரன், மலைமேகு, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com