காரைக்குடி அருகே மர்ம கும்பலால் 2 பேர் கடத்தல்: காட்டுப் பகுதியிலிருந்து கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் மீட்பு

காரைக்குடி அருகே மர்மக்கும்பலால் வெள்ளிக்கிழமை 2 பேர் கடத்தப்பட்டனர். இதில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொரு வரை மீட்க போலீஸார் தீவிர விசாரணை

காரைக்குடி அருகே மர்மக்கும்பலால் வெள்ளிக்கிழமை 2 பேர் கடத்தப்பட்டனர். இதில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொரு வரை மீட்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: தேவகோட்டை அருகேயுள்ள உஞ்சனை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ராம்கணேஷ் என்பவர் கடந்த 2014-இல் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து சிலரைக் கைது செய்தனர். சிலர் பிணையில் வெளியில் உள்ளனர். இதுதொடர்பாக காரைக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இக்கொலையில் தொடர்புள்ளவராக கருதப்பட்ட சுரேஷ் என்பவர் 2014 இல் சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்தநிலையில் கொலையுண்ட ராம்கணேஷ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியன் என்பவரை தேவகோட்டை லெட்சு மிபுரத்தில் ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை காரில் கடத்தியது. அதேபோல் ராம் கணேஷ் கொலைவழக்கில் தொடர்புடைய மற்றொருவரான சூரியநாராயணன் என்பவரை திருமயம் அருகே அந்த கும்பல் கடத்திச் சென்றது.
இருவரிடமும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தில் வைத்து அந்தக்கும்பல் விசாரித்ததாக தெரிகிறது. பின்னர் கடத்தப்பட்ட சுப்பிரமணியனைத் தாக்கி காரைக்குடி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வீசிவிட்டுச்சென்றுள்ளனர். அவரது முனகல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கூடுதல் சிகிச்சைக்காக மதுரை தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தனி போலீஸ் படைகளை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com