சிவகங்கையில் விரைவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும்: மாவட்ட நூலகர்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் விதமாக பொது

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் விதமாக பொது நூலகத்துறையின் கீழ் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் சேரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் தேவகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது நூலகத்துறையின் கீழ் தற்போது கரூர், வேலூர், திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை எஞ்சியுள்ள 24 மாவட்ட மைய நூலகங்களில் தொடங்கி, போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அண்மையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, இத்திட்டத்திற்கு ரூ. 72 லட்சம் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத் துறையின் கீழ் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாதத்தில் மூன்று வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மாலை இருவேளைகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை வரும் செப். 20-க்குள் சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப்பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு அனுபவமிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு அமர்வுக்கு ரூ.1800 ஊதியமாகவும், பாடக் குறிப்புக்கு ரூ.250 வழங்கப்படும். பயிற்சி அளிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்பத்தை வரும் செப்.18-க்குள் சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04575 - 240202,245540 என்ற தொலைபேசி எண்ணிலும், 74026 03601 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com