கல்லூரியில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
        இக்கல்லூரியில் யூ.ஜி.சி. 11 ஆவது திட்டத்தின் கீழ் திறந்தவெளி விளையாட்டு மைதானம்  அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்து மைதானம், 400 மீட்டர் ஓட்டத்துக்கான டிராக் வசதியுடன் பார்வையாளர்கள் அமரும் மாடமும் அமைக்கப்பட்டுள்ளது.
     இப்பகுதியில் முதன்முறையாக, மைதானத்தில் பெய்யும் மழைநீர் தேங்காமல் நிலத்தடிக்கு கீழே வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  விளையாட்டு அரங்கத்தை  கலைக் கல்லூரி செயலர் ராமேஸ்வரன், கல்வியல் கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் முன்னிலையில் ஆறுமுகம் பிள்ளை கல்விக் குழும துணைத் தலைவர் சகுந்தலை நாகராஜன் திறந்து வைத்தார்.
     இவ்விழாவில், கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம், துணை முதல்வர்கள் கோபிநாத், ஆனந்தி, ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், என்.சி.சி.அலுவலர் ஜெயக்குமார், உடற்கல்வி இயக்குநர் ஜெயவேல் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com