காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு ஏப்.14 முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கம்

காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு  வரும் 14ம் தேதி முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. 

காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு  வரும் 14ம் தேதி முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. 
முன்னதாக 6 பெட்டிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.10 மணியளவில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு, காரைக்குடியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், கண்டனூர் புதுவயல், பெரியக்கோட் டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயாங்குடி, பேராவூரணி, ஒட்டாங்காடு வழியாக பிற்பகல் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்றடைந்தது.   
பின்னர், அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு அதே வழித்தடத்தில் மாலை 6 மணியளவில் காரைக்குடி வந்தடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரூ. 25, அறந்தாங்கி, பேராவூரணிக்கு ரூ. 10 என பயணக் கட்டணம் இருக்கும் என்றும், இந்த ரயில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படவிருப்பதாகவும், ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com