சாக்கோட்டை ஒன்றியக் கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஒன்றியக்கிராமங்களில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஒன்றியக்கிராமங்களில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணி வரும் மே மாதம் 28-ந்தேதிவரை நடைபெறவுள்ளது.
   இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்பட்டி 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துப் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் இக்கணக்கெடுப்புப்பணி ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
    மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 6 வயது முதல் 18 வயதுவரையிலான பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளையும் கண்டறியத் திட்டமிடப் பட்டுள்ளதாக வட்டார வள மைய மேற்பார்வை அதிகாரி தெரிவித்தார்.
        இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 26 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 226 குடியிருப்புகளிலும், 5 நகர் பஞ்சாயத்திற்கு உள்பட்ட 72 வார்டுகளிலும், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் இக்கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். இதில் சாக்கோட்டை வட்டார வளமைய மேற் பார்வையாளர், ஆசிரியப்பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். 6 வயது முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்தால் 9788858964 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com