சென்னை கோட்டையை மே.8 இல்  முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 8 ஆம் தேதி சென்னைகோட்டையை

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 8 ஆம் தேதி சென்னைகோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   
    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மண்டல அளவிலான கூட்டம், சிவகங்கையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 
           இக் கூட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான கே.பி.ஓ. சுரேஷ் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
    கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கிடையே உள்ள  ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மே 8 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்.
    இதற்காக, ஏப்ரல் 23 முதல் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஒன்றியமாக வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வரவேண்டும் என்றும்,  தவறும்பட்சத்தில் போராட்டத்தின் போது அனைவரும் கைதாகி, தமிழக சிறைகளை நிரப்புவோம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இக் கூட்டத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முருகேசன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்திருமன், செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com