கேரளத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி  ஆசிரியர் கூட்டணி முடிவு

இயற்கை பேரிடரால் கடும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டக்கிளை  முதல் கட்டமாக ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.

இயற்கை பேரிடரால் கடும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டக்கிளை  முதல் கட்டமாக ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
 இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம், சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார்.
 மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.
இதில், இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாட்டினை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி சிவகங்கையில் நடத்துவது என்றும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து வாடும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு முதல் கட்டமாக சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  சார்பாக ரூ. ஒரு லட்சம்  நிதியுதவி வழங்குவது என்றும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்ர் 8, 9 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழு தேசிய மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     
முன்னதாக, கருணாநிதி,  சோம்நாத் சட்டர்ஜி,  வாஜ்பாய் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்த கூட்டத்தில், ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாவட்ட துணைச் செயலர்கள் ரவி, ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் அமலசேவியர், மாலா, மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், சிங்கராயர், மாவட்டப் பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com