அரசு திட்டங்களை அறிந்து கொள்ள "ஸ்மார்ட் சிவகங்கை' செயலி விரைவில் அறிமுகம்: ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "ஸ்மார்ட் சிவகங்கை"  என்ற

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "ஸ்மார்ட் சிவகங்கை"  என்ற செயலி  உருவாக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார். 
 தேவகோட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: விவசாயிகள் அதிகமானோர் கடந்த ஆண்டு தங்களுக்குரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு தொகை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளதையொட்டி அதற்குரிய வங்கிகளிடம் பேசி 25 நாள்களுக்குள் 75 சதவீதம் நபர்களுக்கு வழங்கவும், மீதமுள்ள நபர்களுக்கும் விரைந்து வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு சரியான முறையில் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தேவையான விவசாயிகள் கூட்டுறவுத்துறை வங்கிகளை பயன்படுத்திக் கொள்வதுடன் மேலும் தேவைகளை தெரிந்து பயன்பெற்றுக் கொள்ள கூட்டுறவு இணைப் பதிவாளரை தொடர்பு கொள்ளலாம். அதேபோல் பொதுமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் விதமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையான மானாமதுரை, திருப்புவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கான உரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது. 
   சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு "ஸ்மார்ட் சிவகங்கை"  என்ற செயலி  உருவாக்கப்பட உள்ளது. அதன் மூலம் வேளாண்மைத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் மூலம் புதிய திட்டங்களை அறிந்து பயன் பெறலாம் என்றார். முகாமில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தோட்டக்கலைத்துறையின் மூலம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் புதிய மரக்கன்றுகளை நட்டதுடன் 2 பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியத் திட்டத்தில் ரூ.3.38 லட்சம் மதிப்பீட்டில் பவர்டில்லர் இயந்திரங்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com