"நீட்' தேர்விலிருந்து விலக்கு கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

"நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும், தமிழக அரசின் இரண்டு தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டியும்

"நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும், தமிழக அரசின் இரண்டு தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டியும் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சமூக நீதி பாதுகாப்புப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாணவர் சங்கத்தினரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதி. ராஜ்குமார் தலைமை வகித்துப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் சங்க மாவட்ட அமைப்பா ளர் பெரி. பழனியப்பன் முன்னிலை வகித்தார். திமுக மாநில இலக்கிய அணித்தலைவர் மு. தென்னவன், தி.க மணடல தலைவர் சாமி. திராவிடமணி, மாவட்ட தி.க தலைவர் ச. அரங்கசாமி, மாவட்ட தி.க செயலாளர் வைகறை, மாவட்ட துணைத்தலைவர் கொ. மணிவண்ணன், துணைச்செயலாளர் பழனிவேலு, திமுக மாவட்ட துணைச்செயலாளர் கே.எஸ்.எம். மணிமுத்து மற்றும் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர்கள், நகர திமுக மாணவரணி அமைப்பாளர் எஸ். அசரப், திமுக நகரச் செயலாளர் நா. குணசேகரன், நகர தி.க தலைவர் ஜெகதீசன் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்டனர்.
       தி.க தலைமை கழக பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கிப்பேசினார். தி.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் புருனோ என்னாரசு வரவேற்றார். முடிவில் திமுக மாணவரணி நகர துணை அமைப்பாளர் முத்துராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com