பாரம்பரிய  மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல்

சிராவயலில் ஜன.16 ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டிற்காக மஞ்சுவிரட்டுத் திடல் தயாராகி வருகிறது.

சிராவயலில் ஜன.16 ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டிற்காக மஞ்சுவிரட்டுத் திடல் தயாராகி வருகிறது.
  தென்தமிழகத்தின் சிறப்பு மிக்க சிராவயலில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டு தோறும் தை மாதம் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடைபெறும். இவ்விழாவிற்குத் தேவையான பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம்போல் வரும் ஜன. 16 ஆம் தேதியன்று மஞ்சுவிரட்டு நடைபெற இருப்பதால் கிராமத்திலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மஞ்சுவிரட்டுப் பொட்டலை சுத்தம் செய்து, தொழு, பார்வையாளர்கள் அமரக் கூடிய கேலரி உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜன.16 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்து கொண்டு வானவேடிக்கை மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு செல்வார்கள். அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். தொடர்ந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிட்ட பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். இந்த மஞ்சுவிரட்டிற்கு சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். இதை காண வெளிநாட்டவர்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள். இதனால் திருப்புத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் இப்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com