மானாமதுரை, இளையான்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடியில் வியாழக்கிழமை புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி, போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடியில் வியாழக்கிழமை புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி, போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவின்படி மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள் பயன்பாட்டை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தீவிரமாக பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும்,
மக்கள் மலம் கழிப்பதற்கு கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் புகையில்லா பொங்கல் கொண்டாட வேண்டும் என்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் சார்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக பள்ளிகளில் பேச்சுப்போட்டிகள், வீதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள், அவர்கள் பங்கேற்ற பேரணி, கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஜனவரி மாதம் முழுவதும் மேற்கண்ட தலைப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என பேரூராட்சி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜான்முகமது, ராஜாராம், துப்புரவு ஆய்வாளர்கள் அபுபக்கர், மணிகண்டன் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com